"உலக அமைதியை நோக்கி முன்னேறுவதே முக்கிய இலக்கு" - அமெரிக்கா, சீனா தலைவர்கள் உறுதி
உலக அமைதியை நோக்கி முன்னேறுவதே அமெரிக்கா - சீனாவின் முக்கிய இலக்கு, என இருநாட்டு தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும், முதல்முறையாக காணொளி மூலம் ஆலோசனை நடத்தினர். அப்போது சீன அதிபர் பேசுகையில், கொரோனா மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்வதில் இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், அமெரிக்காவும் சீனாவும் தகவல் தொடர்பை மேம்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசும்போது, நெருங்கிய நட்புறவுக்கான நடவடிக்கைகள், அமெரிக்கா - சீனாவுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் பயனளிக்க கூடியதாக இருக்கும் என தெரிவித்தார்.
இருநாடுகள் இடையிலான போட்டி மோதலாக மாறக்கூடாது என்று வலியுறுத்திய ஜோ பைடன், நட்பு நாடுகளின் நலனுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்றும், தனது பேச்சில் குறிப்பிட்டார்.
Comments